இந்த வார கிசு கிசு

Cinema Karam Coffee
By Cinema Karam Coffee June 3, 2016 05:47

இந்த வார கிசு கிசு

முட்டை படம் மூலம் பிரபலமான நடிகை, தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். ஆனால், நடிகைக்கு இரண்டு மூன்று நடிகைகளுடன் நடிக்கும் வாய்ப்பே அதிகம் வருகிறதாம். இதனால் நடிகைக்கு நல்ல பெயர் கிடைக்காமல் போகிறதாம். தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்த இனிமேல் இரண்டு கதாநாயகிகள் நடிக்கும் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம். மேலும் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடமும் இதை கண்டிசனாக சொல்லுகிறாராம்.

gossip

நீண்ட காலமாக முன்னணி நடிகையாக இருக்கும் மூன்றெழுத்து நம்பர் நடிகைக்கு தற்போது பட வாய்ப்புக்கள் குறைந்து வருகிறதாம். அதிக சம்பளம் கேட்பதால் நடிகைக்கு இந்த நிலைமை வந்திருக்கிறதாம். இதனால், நடிகையின் தாயார் சம்பளம் ஒரு பிரச்சினை அல்ல. அதை குறைத்துக் கொள்ளலாம்…’’ என்று இறங்கி வந்து இருக்கிறாராம். மகளுக்கு பட வாய்ப்புகள் குறைந்து போனதில், அவருக்கு பெரும் கவலை. அதனால், கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி, மகளுக்காக வாய்ப்பு கேட்கிறாராம், தாய்க்குலம்!  

காத்தாடி நடிகர் தற்போது சொந்தமாக படம் தயாரித்து அவரே நடிக்க இருக்கிறாராம். இதில் நடிகருக்கு ஜோடியாக அவருடன் நட்பாக பழகி வந்த எதிர் நீச்சலடித்த நடிகை நடிப்பார் என்று கூறப்பட்டதாம். நடிகையும் எதிர்பார்த்த நிலையில், தற்போது வேறொரு நடிகையை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். இதனால் நடிகை ஏமாந்து விட்டாராம். இரண்டு நடிகைகள் கொண்ட அந்த படத்தில் மற்றொரு நடிகை வேடம் கிடைக்கும் என்று காத்திருக்கிறாராம். ஆனால், அந்த வேடத்திற்கும் நடிகையை தேர்வு செய்துவிட்டதாக கூறுகிறார்களாம்.

தமிழ் நடிகைகள் பலரும் மும்பைக்கு பறந்து, இந்தி படங்களில் நடிக்க ஆசை படுவார்கள். ஆனால், மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த கண்ணக்குழி நடிகை, இங்கு பல படங்களில் நடித்து விட்டாராம். ஆனால் எந்த படமும் சொல்லுமளவிற்கு ஓடவில்லையாம். மேலும் நடிகைக்கு எந்த பெயரும் கிடைக்கவில்லையாம். இதனால் வருத்தமடைந்த நடிகை, தற்போது தாய் மொழி படங்களில் நடிக்க மும்பை பறந்து சென்றிருக்கிறாராம்.

வம்பு நடிகரிடம் ஏன் நட்பு வைத்துக்கொண்டோம் என்று கொலவெறியாக சுற்றிக்கொண்டிருக்கிறாராம் இளம் இசையமைப்பாளர். தான் சம்பந்தப்படாத ஒரு பாடல் சர்ச்சையில் தன்னை மாட்டிவிட்டு குளிர்காய்ந்த வம்பு நடிகரால் தற்போது படவாய்ப்புகள் இன்றி தவிக்கிறாராம் இசையமைப்பாளர். இந்த சர்ச்சையிலிருந்து முழுவதும் விலகிய பிறகும், இன்னமும் அவர்மீதான கெட்ட இமேஜ் சினிமா வட்டாரத்தில் இன்னும் மறையாததால் இவரை படங்களில் ஒப்பந்தம் செய்ய பலரும் தயங்கி வருகிறார்களாம். எவ்வளவு வேகத்தில் பாப்புலரானாரோ, அதே வேகத்தில் சரிவை நோக்கி சென்றுவிட்டதில் இசையமைப்பாளருக்கு மிகவும் வருத்தமாம். இதனால், இனிமேல் தேவையில்லாத நட்புகளை கூட சேர்த்துக் கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.

மும்பை பட உலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும் இந்தி கஜினி தனது படங்களுக்கு சம்பளம் வாங்குவதில்லையாம். லாபத்தில் பங்கு என்று தயாரிப்பாளருடன் முதலிலேயே ஒப்பந்தம் செய்து கொள்கிறாராம். அவருடைய பாணியை தமிழ் பட உலகில் அப்படியே கடைபிடிக்க ஆரம்பித்து இருக்கிறாராம் கடவுள் நடிகர். சொந்த படம் எடுத்து கையை சுட்டுக் கொண்டதுதான் இதற்கு காரணம் என்கிறார்களாம்.

தமிழுக்கு நம்பரை அழுத்திய நடிகை, தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம். இதில் ஒரு படத்திற்கு கால்சீட் கொடுத்திருந்தாராம். அதே தேதியில் வேறொரு படத்திற்கும் கால்சீட் கொடுத்திருந்தாராம். இதில் ஒரு படத்தின் படக்குழுவினர் நடிகை வருவார் என்று காத்திருந்திருக்கிறார்கள். ஆனால், நடிகை வராமல் வேறொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்திருக்கிறார். நடிகையை தொடர்பு கொண்டு கேட்டதற்கு தவறுதலாக கால்சீட் கொடுத்து விட்டேன் என்று கூறியிருக்கிறாராம். இதனால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறதாம்.

தமிழ் சிறந்த காமெடி தொகுப்புகளை ரசிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ் சிறந்த மெலடி பாடல்கள் தொகுப்புகளை ரசிக்க இங்கே கிளிக் செய்யவும்

சைவம் / அசைவம் சமையல் செய்முறைகளை தமிழில் காண இங்கே கிளிக் செய்யவும்.

Cinema Karam Coffee
By Cinema Karam Coffee June 3, 2016 05:47

பிடிச்சிருக்கோ.. இல்லையோ.. Google+ ல ஒரு லைக் போடலாமே !!

கண்டுபிடிங்க பார்ப்போம் யார் இவரென்று?

நடிகைகள் கேலரி

போடுங்கம்மா / போடுங்கய்யா ஓட்டு

சினிமா செய்திகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற

சினிமா காரம் காபி தளத்தின் புதிய பதிவுகள் மற்றும் அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.