மீண்டும் விஜய் உடன் இணையும் இயக்குனர் பரதன்

Vivek
By Vivek October 31, 2015 10:42

மீண்டும் விஜய் உடன் இணையும் இயக்குனர் பரதன்

தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் 59 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார். காக்கி என பெயர் சூட்டப்பட்ட இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் திருநாள் அன்று  வெளியாகும் என தெரிகிறது. ஒரு படத்தில் நடிக்கும்போதே அடுத்த படத்திற்க்கான கதை, இயக்குனர், தயாரிப்பாளர், முடிவு செய்துவிடும் விஜய் தனது 60, 61, 62 ஆவது படங்களை யார் இயக்குவார்கள் என முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. குஷி பட இயக்குனர் எஸ்.ஏ.சூர்யா, வேலாயுதம் பட இயக்குனர் மோகன் ராஜா மற்றும் நாடோடிகள் சசிகுமார் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

மீண்டும் விஜய் உடன் இணையும் இயக்குனர் பரதன்

இந்த இயக்குனர்களில் ஒருவரே விஜயின் அடுத்தப்படத்தினை இயக்குவார்கள் என சொல்லப்படுகிறது. இந்த வரிசையில் தற்போது ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. விஜயினை வைத்து அழகிய தமிழ் மகன் படத்தினை இயக்கியவர் இயக்குனர் பரதன். இந்த பட்டியலில் இவரும் இணைந்துள்ளார். விஜய்க்காக இவர் ஒரு கதையை உருவாக்கி அதை விஜயிடம் சொல்லி இருக்கிறார். கதையை கேட்ட விஜய் சூப்பர் கதை என பாராட்டி உள்ளாராம். எனவே விஜயின் அடுத்த படத்தினை இவர் இயக்க வாய்ப்புள்ளதாம்.

Vivek
By Vivek October 31, 2015 10:42

பிடிச்சிருக்கோ.. இல்லையோ.. Google+ ல ஒரு லைக் போடலாமே !!

கண்டுபிடிங்க பார்ப்போம் யார் இவரென்று?

நடிகைகள் கேலரி

போடுங்கம்மா / போடுங்கய்யா ஓட்டு

சினிமா செய்திகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற

சினிமா காரம் காபி தளத்தின் புதிய பதிவுகள் மற்றும் அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

Join 5,403 other subscribers