கபாலிக்கு யு சான்று; ஜூலை 22ல் ரிலீஸ்

Cinema Karam Coffee
By Cinema Karam Coffee July 11, 2016 21:23

இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்த கபாலி படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் வருகிற ஜூலை 22ம் தேதி ரிலீஸாகிறது. முன்னதாக படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் கபாலி படத்திற்கு எந்த கட்டும் கொடுக்காமல் ‛யு’ சான்று அளித்திருக்கிறார்கள், இதனால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது.

கபாலி சாதனைகள்

தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது, இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் படம் ரஜினியின் ‛கபாலி’. ரஜினி மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கு ஆதரவாக போராடுபவராக நடித்திருக்கிறார். இளமைகால ரஜினி, வயதான ரஜினி என இரண்டு விதமான தோற்றங்களில் மலேசிய டானாக அசத்தியிருக்கிறார் ரஜினி. படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டது. ஏற்னவே கபாலி படத்தின் டீசர், இந்திய திரையுலகில் ஒரு புதிய மைல் கல்லை ஏற்படுத்தியது. அதோடு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவை பெற்றது.

ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கிறார். முதன்முறையாக ரஜினி, அதிகளவிலான இளம் கலைஞர்களுடன் பணியாற்றியிருக்கிறார். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு பிரம்மாண்டமாய் தயாரித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலாய் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள கபாலி படம், இன்று(ஜூலை 11-ம் தேதி) சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் கபாலி படத்திற்கு எந்த கட்டும் கொடுக்காமல் ‛யு’ சான்று கொடுத்துள்ளனர். கபாலி படம் 2 மணிநேரம் 32 நிமிடங்கள் ஓடக் கூடியாக இருக்கிறது.

இதனிடையே கபாலி படத்திற்கு யு சான்று கிடைத்த மகிழ்ச்சியோடு படத்தின் ரிலீஸ் தேதியையும் தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ‘கபாலி’ படம் வருகிற ஜூலை 22-ம் தேதி ரிலீஸாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

‘கபாலி’ படத்தின் மிகப்பெரிய பிரிமீயர் ஷோக்கள் அமெரிக்காவிலும், பிரான்சிலும் நடக்க இருக்கிறது. உலகம் முழுக்க சுமார் 4000-க்கும் அதிகமான தியேட்டர்களில் கபாலி படம் ரிலீஸாக இருக்கிறது.

தமிழ் சிறந்த காமெடி தொகுப்புகளை ரசிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ் சிறந்த மெலடி பாடல்கள் தொகுப்புகளை ரசிக்க இங்கே கிளிக் செய்யவும்

சைவம் / அசைவம் சமையல் செய்முறைகளை தமிழில் காண இங்கே கிளிக் செய்யவும்.

Cinema Karam Coffee
By Cinema Karam Coffee July 11, 2016 21:23

பிடிச்சிருக்கோ.. இல்லையோ.. Google+ ல ஒரு லைக் போடலாமே !!

கண்டுபிடிங்க பார்ப்போம் யார் இவரென்று?

நடிகைகள் கேலரி

போடுங்கம்மா / போடுங்கய்யா ஓட்டு

சினிமா செய்திகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற

சினிமா காரம் காபி தளத்தின் புதிய பதிவுகள் மற்றும் அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

Join 5,403 other subscribers