சினிமா பிட்ஸ் – இந்த வாரம்

Cinema Karam Coffee
By Cinema Karam Coffee July 14, 2015 16:10

சினிமா பிட்ஸ் – இந்த வாரம்

‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ வெற்றிப் படங்களைத் தொடர்ந்து படத்தின் மூன்றாம் பாகத்தை இந்த ஆண்டு தொடங்க இருக்கிறார்கள். முதல் இரண்டு பாகங்களிலும் சூர்யாவும், அனுஷ்காவும் காதலர்களாகவே வலம் வந்தார்கள். இந்தப் பாகத்தில் இருவருக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பது போல கதையை அமைத்துள்ளார்களாம். ஆனாலும் ஒரு முக்கிய கதா பாத்திரத்தில் ஸ்ருதிஹாசனும் நடிக்க இருக்கிறாராம். ஃபாஸ்ட் ஃபார்வர்ட்ல கேமரா சுத்துமே?

shruthu

‘புலி’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்க அட்லீ இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் விஜய் போலீஸாக நடிப்பதால் படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘மூன்று முகம்’ படத்தின் தலைப்பை வைக்க ஆசைப்படுகிறார்களாம். இதையடுத்து சத்யா மூவீஸ் நிறுவனத்திடமும், ரஜினியிடமும் அனுமதி கேட்டிருக்கிறார்களாம். அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ரஜினி படத்தலைப்பில் விஜய் நடிக்கும் முதல் படமாக அமையும் ‘மூன்று முகம்’. கலக்குங்ணா!

விஜய்யைப் பின்பற்றுகிறார் விஷால் எனவும், விஜய்யோடு மோதுகிறார் எனவும் மாறி மாறி அவ்வப்போது செய்திகள் வரும். ஆகஸ்ட் 2-ம் தேதி ‘புலி’ படத்தின் இசை எனத் தகவல்கள் கசிய, ஒரு புறம் விஜய் ரசிகர்கள் ஹேப்பி. மறுபுறம் அதே நாளில் ‘பாயும் புலி’ படத்தின் இசை வெளியாகும் என விஷாலே அறிவிக்க, விஷால் மீது விஜய் ரசிகர்கள் கடுப்பில் இருப்பதாகச் சொல்கிறார்கள். என்னாச்சு…?

புயல் வேகத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறார் கமல். ‘உத்தம வில்லன்’ படத்துக்குப் பிறகு அவர் நடித்த ‘பாபநாசம்’ படம் 39 நாட்களிலேயே முடிக்கப்பட்டு, இப்போது வெற்றிகரமாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல் அடுத்த படமான ‘தூங்காவனம்’ ஆரம்பிக்கப்பட்டு சரியாக இரண்டு மாதங்களே ஆகிய நிலையில் இன்னும் ஒரு சில நாட்களிலேயே இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிடுமாம்.  கமலின் அடுத்த புராஜெக்ட் இரண்டு வருடங்கள் எடுத்துக்கொள்ளும் பெரிய படமாம். அந்த இடைவெளியை சமாளிக்கத்தான் அடுத்தடுத்து உடனடி படங்களாம். யூத்துல்லா யூத்து!

தனது ‘எந்திரன் 2’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஷாரூக்கான், அமீர்கான், கமல்ஹாசன் என்று ஒரு ரவுண்ட் அடித்த ஷங்கர் ஒரு வழியாக விக்ரமை கன்வின்ஸ் செய்துவிட்டாராம். ஆனால் விக்ரம் போட்ட ஒரு கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டதன் விளைவாகத்தான் இதற்கு சம்மதித்தாராம். அதாவது ஷங்கரின் இயக்கத்தில் தன் மகன் துருவ்வை அறிமுகப்படுத்துவதுதான் அந்த கண்டிஷனாம். ஷங்கரோ என் இயக்கத்தில் இல்லையென்றாலும், எனது தயாரிப்பில் நிச்சயம் அறிமுகப்படுத்துகிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளாராம். சர்ப்ரைஸ்!

‘பாபநாசம்’ படத்தில், நடிப்பில் கமலுக்கு இணையாகப் பேசப்படுபவர் ஆஷா சரத். இவர்தான் மலையாள ‘த்ரிஷ்யம்’ படத்திலும் அதே கேரக்டரில் மிரட்டியவர். சில மலையாளப் படங்களில் நடித்திருக்கும் இவர் ஒரு பரத நாட்டிய கலைஞர். தற்போது தமிழில் இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிகிறதாம். இருந்தும் வரும் வாய்ப்புகள் எல்லாமே கொடுமைப்படுத்தும் பெண்மணி வேடமாகவே இருப்பதுதான் அம்மணிக்குக் கவலையாம். வில்லியாக்கிடுவாங்க. ஜாக்கிரதை!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருப்பது தமிழ் சினிமாவில் ஹைலைட் நியூஸ். ‘ஓ காதல் கண்மணி’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தில் கார்த்திதான் ஹீரோவாம். இந்தப் படம் குறித்து சமீபத்தில் கார்த்தியும் மணிரத்னமும் சந்தித்து விவாதித்தார்களாம். மணிரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்து’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் கார்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. சரி, ஓகே, ஆமா!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரஜினிமுருகன்’ படத்தை ஜூலை 17-ல் வெளியிடயிருப்பதாக முடிவு செய்திருந்ததாம் படக்குழு. ஆனால், அன்றைய தேதியில் தனுஷின் ‘மாரி’, சிம்புவின் ‘வாலு’  படங்கள் ரிலீஸாகவிருப்பதால், தேதியை ஒத்திவைத்திருக்கிறார்களாம். இப்போது ‘ரஜினி முருகன்’ படத்தின் ரிலீஸ் தேதி சுதந்திர தினத்துக்கு மாறியிருக்கிறது. கடைசிநேரத்தில் எல்லாமே மாறப்போகுது பாருங்க!

‘த்ரிஷ்யம்’ படத்தின் ரெக்கார்டை இன்னும் சில நாட்களில் முறியடிக்கப் போகிறது தற்போது மலையாளத்தில் மெகா ஹிட்டடித்திருக்கிற ‘ப்ரேமம்’ படம். அந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்து நடிக்க துடியாய் துடிக்கிறாராம் தனுஷ். விஷயத்தைக் கேள்விப்பட்ட அவரது நலம் விரும்பிகள் அந்தப் படமே ‘ஆட்டோகிராப்’ படத்தையும் ‘அட்டக் கத்தி’யையும் உல்டா பண்ணி எடுத்ததுதான், அதை மறுபடியும் தமிழுக்கு ரீமேக் பண்ணா எடுபடாது என்று கூறினாலும் தனது முடிவில் மாறாமல் இருக்கிறாராம் தனுஷ். மாற மாட்டார்ல மாரி!

Cinema Karam Coffee
By Cinema Karam Coffee July 14, 2015 16:10

பிடிச்சிருக்கோ.. இல்லையோ.. Google+ ல ஒரு லைக் போடலாமே !!

கண்டுபிடிங்க பார்ப்போம் யார் இவரென்று?

நடிகைகள் கேலரி

போடுங்கம்மா / போடுங்கய்யா ஓட்டு

சினிமா செய்திகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற

சினிமா காரம் காபி தளத்தின் புதிய பதிவுகள் மற்றும் அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

Join 5,403 other subscribers