தெலுங்கு பிரேமம் எப்போ ரிலீஸ்?

Cinema Karam Coffee
By Cinema Karam Coffee June 11, 2016 06:54

தெலுங்கு பிரேமம் எப்போ ரிலீஸ்? – மலையாளத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘பிரேமம்’. இப்படம் வெளியாகி வசூல், மற்றும் விமர்சன ரீதியிலும் ப்ளாக் பஸ்டரடித்து  இளைஞர்களால் கொண்டாடப்பட்டது.

தெலுங்கு பிரேமம்

தெலுங்கு பிரேமம்

தெலுங்கில் ரீமேக் செய்யும் வேலைகள் தொடங்கி, படமும் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது.  காதலின் பருவ நிலைகளைச் சார்ந்த இப்படத்தில் நிவின்பாலி கதாபாத்திரத்தில் நாக சைதன்யா நடிக்கிறார்.

சாய்பல்லவி (மலர்) கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசனும், மடோனா செபாஸ்டியன் (செலின்) மற்றும் அனுபமா பரமேஸ்வரன் (மேரி) இருவருமே மலையாளத்தில் நடித்த அதே வேடத்தில் நடிக்கிறார்கள்.

படத்தை எஸ். நாகவம்சி மற்றும் ராதா கிருஷ்ணா தயாரிக்க, கோபி சுந்தர் மற்றும் ராஜேஷ் முருகேசன் ஆகிய இருவரும் படத்துக்கு இசை அமைத்திருக்கின்றனர்.

காமெடி மற்றும் காதல் என்று டபுள் ட்ரீட் இப்படம் மூலம் உறுதி என்று சொல்லப்படுகிறது. பிரேமம் படம் முழுக்க மலையாள கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு படமாக்கப்பட்டது. எனவே தெலுங்குக்கு தேவையான காரமும் மசாலாவும் சேர்க்கப்பட்டுள்ளது என தெரிகிறது.

இப்படத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகவும், இசை வரும் ஜூலை மாதத்திலும், படம் ஆகஸ்ட் 12ம் தேதியும் வெளியிட படக்குழு முடிவுசெய்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். 

மலையாளத்தில் வெளியான இந்த   பிரேமம் 200 நாட்களைக் கடந்து ஓடியது. மலையாளத்தில் ஹிட்டான இந்தப் படம், அக்கட பூமியிலும் ஹிட் ஆகுமா?

தமிழ் சிறந்த காமெடி தொகுப்புகளை ரசிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ் சிறந்த மெலடி பாடல்கள் தொகுப்புகளை ரசிக்க இங்கே கிளிக் செய்யவும்

சைவம் / அசைவம் சமையல் செய்முறைகளை தமிழில் காண இங்கே கிளிக் செய்யவும்.

Cinema Karam Coffee
By Cinema Karam Coffee June 11, 2016 06:54

பிடிச்சிருக்கோ.. இல்லையோ.. Google+ ல ஒரு லைக் போடலாமே !!

கண்டுபிடிங்க பார்ப்போம் யார் இவரென்று?

நடிகைகள் கேலரி

போடுங்கம்மா / போடுங்கய்யா ஓட்டு

சினிமா செய்திகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற

சினிமா காரம் காபி தளத்தின் புதிய பதிவுகள் மற்றும் அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

Join 5,403 other subscribers