தொடரி இசை வெளியீட்டு விழா துளிகள்

Cinema Karam Coffee
By Cinema Karam Coffee June 6, 2016 22:24

தொடரி இசை – பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தொடரி’. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

thodari music release

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், தனுஷ் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

தொடரி இசை வெளியீட்டு விழாவில் இருந்து சில துளிகள்:

* இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ‘அடடா’ பாடல் ஆகியவற்றை இசை வெளியீட்டு விழாவில் முதலில் திரையிட்டார்கள். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவை தொகுத்து வழங்கினார் அஞ்சனா.

* முதலில் பேசிய தயாரிப்பாளர் தியாகராஜன் “பல படங்களில் நடித்திருந்தாலும், ‘தொடரி’ படத்தை தனது முதல் படம் போன்று நினைத்து தனுஷ் உழைத்திருக்கிறார். இப்படத்தின் ரயில் சண்டைக்காட்சிகளுக்காக டூப் போடாமல் நடித்திருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

* “ரயிலில் தொங்கிக் கொண்டே சண்டையிடுவது போன்ற காட்சிகளில் நடித்திருக்கிறார் தனுஷ். அதனைப் பார்க்கும் போது பயமாக இருக்கும். அவர் மட்டுமன்றி சண்டை பயிற்சியாளர்கள் அனைவருமே நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார் சண்டைப்பயிற்ச்சி இயக்குநர் ஸ்டண்ட் சிவா.

* “இப்படத்தின் இறுதிக் காட்சிகளுக்காக தயாரிப்பாளர் நிறைய செலவழித்திருக்கிறார். 8 கேமராக்கள் வைத்து பிரம்மாண்டமாக படமாக்கி இருக்கிறோம்” என்றார் ஸ்டண்ட் சிவா.

* தனுஷிடம் எனக்கு ஒரே ஒரு கேள்வி “எப்படி தம்பி… ஒவ்வொரு படத்தின் கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறாய்” என்று தனது பேச்சில் குறிப்பிட்டார் இயக்குநர் மனோபாலா.

* தனுஷ் மற்றும் பிரபுசாலமன் இருவரிடமும் இப்படத்தில் இருந்து ‘இளைய சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை உபயோகிக்கும்படி கோரிக்கை விடுத்தார் இமான் அண்ணாச்சி

* ‘தொடரி’ ட்ரெய்லரில் தனுஷைப் பார்த்து ‘உன் மூஞ்ச்சியைப் பார்க்க பிடிக்கல’ என்ற வசனம் பேசிய ஹரிஷ் உத்தமன் பேச அழைத்தார்கள். அப்போது ரசிகர் ஒருவர் “என் தலைவரைப் பார்த்து அப்படியெல்லாம் பேசாதீர்கள்” என்று குரல் எழுப்பினார்.

* படவா கோபி பேசும் போது தன்னுடைய மகன் உங்களுடைய தீவிர ரசிகன். அவனுக்கு வாழ்க்கையில் சிஏ ஆக வேண்டும், மற்றொரு உங்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றார். உடனே தனுஷ் அவருடைய பையனை அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

* “நாங்கள் 100 பாடல்கள் மூலம் எட்டுவதை, தனுஷ் ஒரே பாடல் மூலமாக எட்டிவிடுவார்” என்று தனது பேச்சில் குறிப்பிட்டார் பாடகர் கானா பாலா.

* “ரஜினி சார் மற்றும் கமல் சார் இருவருடைய கலவைத் தான் தனுஷ். புகைப்படங்களில் கூட அவருடைய நடிப்பைக் காண முடிகிறது” என்றார் சின்னி ஜெயந்த்.

* ‘புலி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டி.ஆரின் பேச்சு எப்படி இருந்ததோ, அதே போல இந்த விழாவில் ஜாக்குவார் தங்கத்தின் பேச்சு இருந்தது. அவருடைய பேச்சில் ‘இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ்’ என்று பலமுறை குறிப்பிட்டார்.

* “படப்பிடிப்பில் கேரவாவேனில் இறங்கியவுடன் தனுஷ், ரயிலில் பணிபுரியும் பையனைப் போல் நடிக்க ஆரம்பித்துவிட்டார். காமெடி பண்ணுவதற்கு நான் நிறைய இடங்கள் கொடுத்திருக்கிறார்” என்றார் கருணாகரன்.

* தன்னுடைய வித்தியாசமான தோற்றத்தில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியவர் இயக்குநர் செல்வராகவன். அவருடைய பேச்சில் தனுஷ் குறித்து “தம்பி உடையான் படைக்கு அஞ்சான்” என்று குறிப்பிட்டார். மேலும் பிரபுசாலமனை தனக்கு ஆரம்பித்தில் இருந்து தெரியும், அவருடைய உழைப்பு மிகவும் பெரியது என்று தெரிவித்து பிரபுசாலமனை கட்டிப்பிடித்து பாராட்டினார்.

* ஆர்.வி.உதயகுமார் தன்னுடைய பேச்சில் “எதார்த்தமான நடிகர் தனுஷ். அவரை பல இளைஞர்கள் பின் தொடர்கிறார்கள். ரஜினியை விட நன்றாக சண்டையிடவும், கமலைவிட நன்றாக நடிக்கவும் தெரிந்தவர் தனுஷ்” என்று தெரிவித்தார்.

* “கமலுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் நடிப்பில் முத்திரை பதித்தவர் தனுஷ்” என்று அவருடைய படங்களின் வசனங்களைப் பேசி காண்பித்தார் இயக்குனர் வசந்தபாலன்

* “மேனகா, ரம்பா,ஊர்வசி ஆகியோரை மிக்சியில் அடித்த போது வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ‘நானும் ரவுடிதான்’ படத்தில் என்னுடைய முதலாளி தனுஷ்” என்று குறிப்பிட்டார் இயக்குநர் பார்த்திபன்.

* “தனுஷின் ‘தொடரி’ வியாபாரம் ரூ.50 கோடியை தாண்டும்” என்று குறிப்பிட்டார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு.

* “ஒரிசாவில் ஒரு பாடல் படமாக்கப்பட்ட போது, நாங்கள் படப்பிடிப்பு நடத்திய இடத்தில் தங்க ஹோட்டல்கள் எதுவுமில்லை. அங்கு, கேராவேனிலேயே தங்கி 4 நாட்கள் நடித்துக் கொடுத்தார்” என்றார் இயக்குநர் பிரபுசாலமன்.

தமிழ் சிறந்த காமெடி தொகுப்புகளை ரசிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ் சிறந்த மெலடி பாடல்கள் தொகுப்புகளை ரசிக்க இங்கே கிளிக் செய்யவும்

சைவம் / அசைவம் சமையல் செய்முறைகளை தமிழில் காண இங்கே கிளிக் செய்யவும்.

Cinema Karam Coffee
By Cinema Karam Coffee June 6, 2016 22:24

பிடிச்சிருக்கோ.. இல்லையோ.. Google+ ல ஒரு லைக் போடலாமே !!

கண்டுபிடிங்க பார்ப்போம் யார் இவரென்று?

நடிகைகள் கேலரி

போடுங்கம்மா / போடுங்கய்யா ஓட்டு

சினிமா செய்திகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற

சினிமா காரம் காபி தளத்தின் புதிய பதிவுகள் மற்றும் அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

Join 5,403 other subscribers