பிரியமானவள் – புது சீரியல் எப்படியிருக்கும் ???

Vivek
By Vivek January 26, 2015 08:28

வீட்டில் இரவு நேரங்களில் எந்தவெரு சேனலையும் மாற்ற முடியாதபடி ஆக்கிரமித்திருக்கும் சீரியல் வரிசைகளில் சன் டிவியினை அடித்துக்கொள்ள முடியாது. சாயங்காலம் 6 மணி முதல் ஆரம்பிக்கும் இந்த தொடர் இரவு 11 மணி வரை நீளுகிறது. ஒரு சீன் கூட விடாம பாக்குற குடும்பத் தலைவிகள் இருக்கும்வரை இது நீண்டுகொண்டேதான் செல்லும். அதற்குமேல் சில மாதங்களுக்கு முன்பு, திங்கள் முதல் வெள்ளி வரை இருந்த சீரியல்களை, திங்கள் முதல் சனி வரை மாற்றி அனைவரும் ஒரு ஷாக் கொடுத்தது சன் டிவி.

தென்றல்

சன் டிவி ஒளிபரப்பும் சீரியல்களில் முக்கியமானது விகடன் நிறுவனம் தயாரித்து வழங்கும் சீரியல்கள்தான். இதில் போன்வாரம் இரவு 9 மணி சீரியலான ‘தென்றல்’ ஐ ஒருவழியாக முடித்து வைத்தனர். இது ஐந்தாண்டுகளுக்கும் மேலாக சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரியமானவள்

சீரியலைப் பற்றி போடும் டிரைலர் மாதிரி அரைமணி நேரத்திற்கு ஒருமுறை போடும் விளம்பரங்களில் ஒரு அருமையான மாமியரைப் பற்றிக் கூறியுள்ளனர். இது போதாதா குடும்பத்தரசிகளுக்கு, கண்டிப்பாக இந்த மெகாத்தொடர் அடுத்த ஐந்தாண்டுகளைப் பிடித்துவிடும்.கடந்த 19 தேதி முதல் இத்தொடர் திங்கள் முதல் சனி வரை 9 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.

பிரியமானவள்

இதன் முக்கிய பாத்திரத்தில் மாமியாராக விஜய் டிவியின் மகாராணி சீரியலில் நடித்த பிரவீனா நடிக்கிறார், இவருக்கு கணவராக சுபலேகா சுதாகர் நடிக்கிறார்.

கதைக்களம்

பிரவீனா இளம்வயதில் அகதிகள் பகுதிகள் இருப்பவர், அவரைக் காதலித்து கரம்பிடிக்கிறார் சுதாகர். சுதாகர் பெரிய இடத்துப் பிள்ளை என்பதால் அவரின் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறார்கள். வாழ்க்கையில் போராடி முன்னுக்கு வரும் இந்த ஜோடிக்கு நான்கு மகன்கள். ஒரு பெண்குழந்தைகூட இல்லையென்பதால் வருகின்ற மருமகள்களை தன் பெண்ணாக பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார் பிரவீனா. தனது வாரிசுகள் மூலம் குடும்பத்தினரின் எண்ணிக்கையினை அதிகமாக்க வேண்டும், வீடு முழுவதும் சொந்தங்கள் நிறைந்திருக்க வேண்டும் பிரவீனா எண்ண, அதற்குத் தடையாக வருபவற்றை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் இந்த பிரியமானவள். இனி வரும் ஆண்டுகளில் இதைத்தான் நீங்கள் பார்க்கப்போகிறார்கள்.

‘Piriyamanaval’ – A new serial which replaced ‘Thendral’ serial in Sun Tv, is going to be telecasted on the upcoming days at 9 pm.

Vivek
By Vivek January 26, 2015 08:28

பிடிச்சிருக்கோ.. இல்லையோ.. Google+ ல ஒரு லைக் போடலாமே !!

கண்டுபிடிங்க பார்ப்போம் யார் இவரென்று?

நடிகைகள் கேலரி

போடுங்கம்மா / போடுங்கய்யா ஓட்டு

சினிமா செய்திகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற

சினிமா காரம் காபி தளத்தின் புதிய பதிவுகள் மற்றும் அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

Join 5,403 other subscribers