பிரியாணி நடிகர் பிடிவாதம்

Cinema Karam Coffee
By Cinema Karam Coffee June 2, 2016 05:49

கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் என்று பிரியாணி நடிகர் பிடிவாதம் பிடித்து வருகிறாராம். ஜீவனான நடிகரை வைத்து திருட்டு சம்பந்தமான படத்தை எடுத்த நடிகர் தற்போது அப்படத்தின் 2 வது பாகத்திற்கு நடிகர் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.

இப்படத்தைத் தயாரிக்க ஒரு பெரிய நிறுவனம் முன்வந்திருக்கிறது. ஆனால் படத்தின் கதை ரொம்பவே ஏடாகூடமாக இருக்கிறதாம். இதனால் முன்னணி நடிகர்கள் பலரும் இப்படத்தில் நடிக்கத் தயங்கி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து தடுமாறி வரும் பிரியாணி நடிகரைச் சந்தித்து இப்படத்தின் கதையைக் கூறியிருக்கிறார். படத்தின் கதையைக் கேட்ட நடிகர் இப்படி ஒரு படத்தில் நடித்து உள்ள மதிப்பையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற முடிவிற்கு வந்திருக்கிறார். இதனால் சம்பளமாக எத்தனை கோடிகள் கொடுத்தாலும் இப்படி ஒரு படத்தில் நடிக்க மாட்டேன் என்று கறாராகக் கூறிவிட்டாராம். தர்போது வேறு யாராவது சிக்குவார்களா? என இயக்குநர் தீயாய் தேடி வருகிறாராம்.

தமிழ் சிறந்த காமெடி தொகுப்புகளை ரசிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ் சிறந்த மெலடி பாடல்கள் தொகுப்புகளை ரசிக்க இங்கே கிளிக் செய்யவும்

சைவம் / அசைவம் சமையல் செய்முறைகளை தமிழில் காண இங்கே கிளிக் செய்யவும்.

Cinema Karam Coffee
By Cinema Karam Coffee June 2, 2016 05:49

பிடிச்சிருக்கோ.. இல்லையோ.. Google+ ல ஒரு லைக் போடலாமே !!

கண்டுபிடிங்க பார்ப்போம் யார் இவரென்று?

நடிகைகள் கேலரி

போடுங்கம்மா / போடுங்கய்யா ஓட்டு

சினிமா செய்திகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற

சினிமா காரம் காபி தளத்தின் புதிய பதிவுகள் மற்றும் அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.