கபாலி – மலேசியா டானாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி

Vivek
By Vivek October 27, 2015 14:22

கபாலி – மலேசியா டானாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அட்டகத்தி பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் படம் கபாலி. இந்த படத்தில் ராதிகா ஆப்தே, ஜோன் விஜய், தினேஷ், கிஷோர் குமார், கலையரசன், தன்ஷிகா, ரித்விகா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைப்பெற்று முடிவடைந்துள்ளது. சென்னையில் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதால் இரண்டாம்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் மலேசியா செல்ல உள்ளனர்.

கபாலி – மலேசியா டானாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி

இந்த படத்தினை எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் பட நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒளிப்பதிவைனை ஜி.முரளியும் இசையை சந்தோஷ் நாராயணனும் செய்து வருகிறார்கள். படத்தொகுப்பினை கே.எல்.பிரவீன் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே ரஜினி டான் தோற்றத்தில் இருக்கும்படி வெளிவந்த கபாலி பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் கதை பற்றி பல்வேறு செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. அந்த வகையில் சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்து வரும் ரஜினி அங்கு ரவுடிகளை அடக்கி சிறிய தாதாவாக உருவெடுக்கிறார் பின்னர் வெளிநாட்டு வேலைக்கு செல்லும் தமிழர்கள் ஏமாற்றப்படுவதை அறிந்த ரஜினி இங்கிருந்து மலேசியா சென்று அங்கு பெரிய டானாக வலம் வருகிறார் என பல கதைகள் இணையத்தில் உலாவுகிறது.

Vivek
By Vivek October 27, 2015 14:22

பிடிச்சிருக்கோ.. இல்லையோ.. Google+ ல ஒரு லைக் போடலாமே !!

கண்டுபிடிங்க பார்ப்போம் யார் இவரென்று?

நடிகைகள் கேலரி

போடுங்கம்மா / போடுங்கய்யா ஓட்டு

சினிமா செய்திகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற

சினிமா காரம் காபி தளத்தின் புதிய பதிவுகள் மற்றும் அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

Join 5,403 other subscribers