விஜய் சேதுபதிக்கு தம்பி ஆகிட்டேன்!

Cinema Karam Coffee
By Cinema Karam Coffee December 30, 2014 12:30

ஆதித்யா சேனலில் அதகளம் பண்ணும் திருச்சி சரவணக்குமார் என்ற டி.எஸ்.கே. சினிமா பக்கமும் திறமை காட்ட ஆரம்பித்திருக்கிறார்.

tsk kumar

‘அட்டகத்தி’ தினேஷ் நண்பராக ‘வாராயோ வெண்ணிலாவே’ படத்திலும், விமல், சமுத்திரக்கனி நடிக்கும் ‘நீ எல்லாம் நல்லா வருவடா’ படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராகவும், ‘புறம்போக்கு’ படத்தில் ஒரு முக்கியக் கேரக்டரிலும் நடிக்கிறார்.

” இந்த மூணு படங்களுமே எனக்கு ரொம்ப முக்கியாமனவை. ‘புறம்போக்கு’ பட ஷூட்டிங்ல  ஜனநாதன் சாரைப் பார்த்து ரொம்ப பயந்தேன். டயலாக் சொல்லவே தயங்கினேன்.  ‘ஃப்ரெண்ட் கிட்ட பேசுற மாதிரி கேஷூவலா பேசு’ன்னு தைரியம் கொடுத்தார். நல்லா பேசுனதும், ஸ்பாட்லயே எல்லார் முன்னாடியும் கிளாப்ஸ் அடிச்சு ‘நல்லா பண்றடா! கீப் இட் அப்’னு பாராட்டினார்.

சிம்பு, சூர்யா, ஆர்யா, ராதாம்மா வாய்ஸ்ல மிமிக்ரி பண்ணி கார்த்திகாவுக்கு ஃப்ரெண்ட் ஆகிட்டேன். விஜய் சேதுபதிகிட்ட அவர் மாதிரிபே பேசிக் காட்டினேன். ‘ யாருமே என் வாய்ஸ்ல பேசிக் காட்டுனதில்லை. சூப்பரா இருக்குடா ‘ ன்னு சொன்னார். இப்போ விஜய் சேதுபதிக்கு தம்பி ஆகிட்டேன்.

‘எனக்குப் பிரச்னை’, ‘சூர்யா – ஜோதிகா’, ‘பாப் மியூசிக் ஆல்பம்’னு மூணு மியூசிக் ஆல்பம் பண்றேன். பெருசா சாதிக்கணும் சார்! ” கண்களில் நம்பிக்கை மிளிரப் பேசுகிறார் டி.எஸ்.கே.

Cinema Karam Coffee
By Cinema Karam Coffee December 30, 2014 12:30

பிடிச்சிருக்கோ.. இல்லையோ.. Google+ ல ஒரு லைக் போடலாமே !!

கண்டுபிடிங்க பார்ப்போம் யார் இவரென்று?

நடிகைகள் கேலரி

போடுங்கம்மா / போடுங்கய்யா ஓட்டு

சினிமா செய்திகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற

சினிமா காரம் காபி தளத்தின் புதிய பதிவுகள் மற்றும் அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

Join 5,403 other subscribers