வேதாளம் படத்தின் டீசர் வெளிவராததற்கு என்ன காரணம்

Vivek
By Vivek October 2, 2015 12:02

வேதாளம் படத்தின் டீசர் வெளிவராததற்கு என்ன காரணம்

தமிழ் திரையுலகில் தற்போது வணிக ரீதியாக போட்டியாளர்களாக விளங்குபவர்கள் அஜீத் மற்றும் விஜய். இவர்கள் சினிமாவைத் தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள் என்றும் கூறி வருகின்றனர். ஆனாலும் ஒவ்வொரு தடவையும் போட்டி ஏற்படுகிறது. விஜய் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் “புலி”. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சுருதிஹாசன் மற்றும் ஹன்சிகா நடித்துள்ளனர். இப்படம் பெரிய எதிர்பார்ப்பில் நேற்று இறங்கியது. இப்படத்தின் டிரெய்லர் வெளியிட்ட அன்று இதற்கு போட்டியாக அஜீத் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. “வேதாளம்” என்று அஜீத் படத்தின் பெயர் வைக்கப்பட்டது. இதனால் அன்று வெளியான விஜய் படத்தின் டிரெய்லர் அனைவரையும் சென்றடையவில்லை. அன்று அனைவரும் தல படத்தின் பெயருக்காக காத்திருந்தனர். இதே போல் நேற்று “புலி” இறங்குவதாக கூறப்பட்டிருந்தது. அதே நேரத்தில் அஜீத் படத்தின் டீசர் வெளியிடப் போவதாக பாடலாசிரியர் மதன் கார்க்கி தனது டுவீட்டர் பக்கத்தில் டுவீட் செய்திருந்தார். இது விஜய் படத்திற்கு போட்டியாக அஜீத் பட டீசர் வெளியாகும்படி செய்திருந்தனர். இதனால் கடுப்படைந்தனர் விஜய் ரசிகர்கள்.

வேதாளம் படத்தின் டீசர் வெளிவராததற்கு என்ன காரணம்

இருப்பினும் ஆவலோடு “புலி” படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள். திடீரென வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையால் படம் இறங்க சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் விஜய் “புலி” படம் இறங்கியே ஆகும் என கூறியிருந்தார். இளைய தளபதி சொன்னதைக் கேட்ட ரசிகர்கள் அமைதி காத்தனர். அவர் கூறியபடியே படம் வெளியானது. ஆனால் படம் இறங்குமா இல்லை இறங்காதா என்ற குழப்பம் மிகுந்த நேரம் நீடித்த்தால் இறங்காது என்ற நினைப்பில் “வேதாளம்” படத்தின் டீசர் வெளியீடு நிறுத்தப்பட்டது. இதற்கு காரணம் தளபதி படம் இறங்கும் அதே நேரத்தில் தல படத்தின் டீசர் வெளியாக வேண்டும் என்று உறுதியாக இருந்தனர். சிக்கலில் “வேதாளம்” படம் டீசர் வெளிவந்தால் விஜய் மற்றும் அவர் தரப்பில் அப்செட் ஆவார்கள் என்று எண்ணியும் டீசர் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. கடைசியில் தளபதி படம் இறங்க தல பட டீசர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

Vivek
By Vivek October 2, 2015 12:02

பிடிச்சிருக்கோ.. இல்லையோ.. Google+ ல ஒரு லைக் போடலாமே !!

கண்டுபிடிங்க பார்ப்போம் யார் இவரென்று?

நடிகைகள் கேலரி

போடுங்கம்மா / போடுங்கய்யா ஓட்டு

சினிமா செய்திகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற

சினிமா காரம் காபி தளத்தின் புதிய பதிவுகள் மற்றும் அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

Join 5,403 other subscribers